×

பருவநிலை மாற்றங்களால் பாதிப்பு கேரளாவில் குளிர்கால மழை 57% குறைவு: கோடை வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்த ஆண்டு குளிர்கால மழை 57 சதவீதம் குறைந்துள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட ஓரளவு அதிகம் பெய்தது. இது மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.இந்த நிலையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலத்திலும் கேரளாவில் மழை பெய்வது உண்டு. வழக்கமாக இந்த 2 மாதங்களிலும் சராசரியாக 22.40 மி.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு 9.60 மி.மீ மட்டுமே குளிர்கால மழை பெய்துள்ளது. 57 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 13.10 மி.மீ. குளிர்கால மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கேரளாவில் கோடை காலம் மிக கடுமையாக இருக்கும் என்று மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து உள்ளது. கோடையில் சராசரியைவிட ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலே கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : winter rainfall ,climate change ,Kerala , Climate, Kerala, winter rain, summer sun
× RELATED வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை...