×

லால்குடி அருகே தட்சிணாமூர்த்தி சுவாமி சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைப்பற்றி விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோமாங்குடி கிராமத்தில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொன்மையான தட்சிணாமூர்த்தி சுவாமி கற்சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிலையை மீட்டு, ஊர்காட்டேரி என்ற இடத்தில் வைத்திருந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஐஜி, எஸ்பி உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் டிஎஸ்பி கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் தென்னரசன், லதா எஸ்ஐகள் செல்வராஜ், செந்தில்குமார், போலீசார் பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோர் அங்கு சென்று சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 மேலும் சிலையை பறிமுதல் செய்தனர். இதுபற்றி விசாரிக்க சென்னை கிண்டி சிலை திருட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான போலீசார் இந்த சிலை எந்த கோயிலில் திருடப்பட்டது, சிலையை கொண்டு வந்து இங்கு மறைத்து வைத்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சிலை எந்த கோயிலை சேர்ந்தது என்பது குறித்து மக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 9498154500 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Tags : Dakshinamoorthy Swamy ,Lalgudy ,Dakshinamoorthy Swami of Statue , Lalgudi, Dakshinamoorthy Swami Statue, Rescue
× RELATED தவறான சிகிச்சையால் நாய் இறந்ததாக டாக்டர் மீது போலீசில் புகார்