×

ஒலிம்பிக்கை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்க ஒப்பந்தம் அனுமதிக்கிறது: ஜப்பான் ஒலிம்பிக் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்க தங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் ஒலிம்பிக் போட்டிக்கு தடை ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு அமைச்சர் செய்கோ ஹசிமோடோ சர்வதேச ஒலிம்பிக் அமைப்புடனான ஒப்பந்தத்தில், 2020க்குள் போட்டியை நடத்த வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். அதேநேரத்தில் ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்த உறுதிபூண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டோக்கியோவில் இதுகுறித்து விளக்கம்ளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச், கொரோனா வைரஸால் எந்தவித அச்சமும் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது தான் எங்கள் நோக்கம் என்று உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து, போட்டியை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ எந்தவித திட்டமும் இல்லை என்று தாமஸ் போச் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : minister ,Olympics ,Japan ,parliament , Tokyo,Olympics, Japan, Minister, Parliament
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...