×

பார்மலின் கலந்த ரசாயன மீன்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில் ராமேஸ்வரத்திலோ மீன்களின் விலை அதிகரிப்பு!

ராமேஸ்வரம்: பார்மலின் கலந்த ரசாயன மீன்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில் ராமேஸ்வரத்திலோ மீன்களின் விலை அதிகரித்துள்ளது. மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது மீன்கள் தான். ஆனால் கடந்த சில தினங்களாகவே மீன்களில் பார்மலின் ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மீன்விற்பனை நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மீன்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களை ஒருபுறம் நேரடியாக ஏற்றுமதி செய்வதோடு, மீன் சந்தைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் மீன்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

அதேபோன்று பார்மலின் ரசாயனம் கலந்த மீன்களை வாங்காமல், நேரடியாகவே நல்ல முறையில் ஆரோகியமான மீன்களை வாங்க வேண்டும் என்பதற்காகவே பொதுமக்கள் மீன் சந்தையை கடந்து, மீன்களை நேரடியாகவே விற்பனை செய்யக்கூடிய துறைமுகத்திற்கு சென்று வாங்கி செல்கின்றனர். தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய பார்மலின் கலந்த மீன்கள் இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரோக்கியமான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? அல்லது பார்மலின் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து அதிகாரிகள் முழுமையான ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ராமேஸ்வரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Rameshwaram ,sale , Formalin, fish sales, Rameswam, fish prices, increase
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...