×

ஹாக்கி தரவரிசை பட்டியல்; முதல்முறையாக இந்தியா அபாரம்: சர்வதேச சாம்பியனை பின்னுக்கு தள்ளியது

புதுெடல்லி: கடந்த 2003ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட எப்ஐஹெச் உலக ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதல்முறையாக நான்காவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் நடந்த எப்ஐஹெச் ப்ரோ ஹாக்கி - 2020 லீக் தொடரின் முதல் மூன்று சுற்று ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டது. அதனால், இந்திய அணியின் தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் பெல்ஜியம் அணியும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து அணியும், நான்காவது இடத்தில் இந்திய அணியும் இடம் பிடித்துள்ளன. கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற அர்ஜென்டினா அணியை இந்திய அணி பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போது அர்ஜென்டினா அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், முதல்முறையாக தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு, ஹாக்கி கூட்டமைப்பு மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : India , Hockey, Rankings List, India Top
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...