×

தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் 50% சரிவு : பள்ளி கல்வித்துறை புள்ளி விவரத்தில் அதிர்ச்சி

சென்னை : தமிழ் வழியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 50% ஆக குறைந்துள்ளதாக வெளியாகி உள்ள புள்ளி விவரம் தமிழ் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள், மூலம் இது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 8,16,350 மாணவர்களில் 4,65,000 பேர் மட்டுமே தமிழில் தேர்வு எழுதுகின்றனர். இது 57%ஆகும்.

வழக்கமாக ஒட்டு மொத்த அளவில் 65%ஆக இருந்த நிலையில், அந்த விழுக்காடு சரிந்து வருவது தெரியவந்துள்ளது. நீட் போன்ற தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்காக ஆங்கில வழிக்கு மாணவர்கள் மாறுவதே காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். அதே போல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 76,903 பேர் குறைவாக தேர்வு எழுதுகின்றனர்.

Tags : Tamil Language , Public choice, school education, Tamil, activists and academics
× RELATED 2ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025...