×

100 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் சொல்லும் ரகசியம்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஜப்பானைச் சேர்ந்த சிடேட்சு வாடன்பேயின் வயது 112. உலகிலேயே அதிக வயது வாழும் ஆண் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டார் வாடன்பே. இப்போது கூட இனிப்புகளையும் க்ரீம் பப்ஸுகளையும் விரும்பிச் சாப்பிடுகிறார். வடக்கு ஜப்பானில் 1907-ம் ஆண்டு பிறந்தார். விவசாயப் பள்ளியில் பயின்ற வாடன்பே தாய்வானில் 18 வருடம் வாழ்ந்தார்.

அங்கே ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பயிரிட்டார். திருமணமாகி ஐந்து குழந்தைகள் பிறந்தனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஜப்பான் திரும்பிய வாடன்பே ஓய்வு பெறும் வரையில் அரசுப் பணியில் இருந்தார். போன்சாய் மரங்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டவர். ‘‘கோபம் கொள்ளாதீர்கள். சிரித்துக்கொண்டே இருங்கள்...’’- அதிக நாட்கள் உயிர்வாழ வாடன்பே சொல்லும் ரகசியம் இதுவே.

Tags : Sidetsu Wadenbay,age 112, of Japan.
× RELATED சென்னையில் இருந்து மதுவாங்க...