×

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு விவகாரம்; டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மேலும் சிலரிடம் விசாரிக்க திட்டம்

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு வழக்கில் ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான ஒவ்வொரு முறைகேட்டிலும் ஜெயக்குமார், ஓம்காந்தன் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் அனைத்து முறைகேடும் செய்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து ஒவ்வொரு தேர்வு முறைகேடு தொடர்பாகவும் அவர்கள் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்டமாக குரூப்-4 விவகாரத்தில் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பின்பு குரூப்-2 ஏ விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இந்த விவகாரத்திலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அடுத்தகட்டமாக விஏஓ தேர்விலும் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. ஏனென்றால் இந்த விஏஓ தேர்வு முறைகேடு தான் முதற்கட்டமாக நடந்ததாகவும், அடுத்தடுத்து இந்த தேர்வுகளில் எல்லாம் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் 8 தேர்வர்களை தேர்ச்சி பெற வைத்தது தெரிய வந்தது. இன்னும் இந்த விஏஓ தேர்வில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது?. எந்தெந்த மையங்களில் முறைகேடானது நடைபெற்றது?. என்பது குறித்து இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகிய இருவரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் 5 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டி,என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மேலும் சிலரிடம் விசாரனை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். குரூப்-4 தேர்வு கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-2 ஏ மற்றும் 2016-ம் ஆண்டில் நடைபெற்ற விஏஓ தேர்வு ஆகியவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : DNBSC ,TNPSC ,CBCID Police , Group Selection Abuse, V.A.O. Examination, TNPSC, CBCID police
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு