×

ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாலிபான் மறுப்பு; 3 வார போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்ததால் மீண்டும் தாக்குதல்

காபூல்: அமைதி வழிக்கு திரும்புவதாக உறுதியளித்து அமெரிக்காவுடன் உடன்படிக்கை செய்துள்ள தாலிபான் தீவிரவாத அமைப்பு மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ளதால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. தலைநகர் காபூலில் பேசிய தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் ஒப்பந்தத்தின் படி செயல்பட மறுத்து வருவதாக கூறினார். ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள 5,000 தாலிபான்களை விடுதலை செய்ய அரசு தாமதம் செய்வதாக குற்றம் சாட்டினார். சிறையில் தாலிபான்கள் அனைவரையும் விடுதலை செய்யும் வரை ஆப்கானிஸ்தான் அரசு உடடான பேச்சுவார்த்தையில் பங்கேற்கபோவதில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களது பிடியில் உள்ள ஆப்கன் 1,000 பிணை கைதிகளையும் வடுவிக்கப்பபோவதில்லை என்று தாலிபான் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனிடையே அமெரிக்க - தாலிபான் இடையயான ஒப்பந்தத்திற்காக அறிவிக்கப்பட்ட 3 வார போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.

அப்கானின் தென்கிழக்கு நகரமான கோஸ்டில் உள்ள கால்பந்து மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இடையே 18 ஆண்டுகளுக்கு மேல் கடும் சண்டை நடந்து வந்தது. இந்த போரினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்த நிலையில் கடந்த மாத இறுதியில் தான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.


Tags : Taliban ,government ,ceasefire ,Afghan ,re-attack ,US , Afghanistan, US, Taliban, peace deal, ceasefire, re-attack
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...