×

சில்லி பாயின்ட்...

* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296), நியூசிலாந்து (180) அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன.
* நியூசி. கேப்டன் வில்லியம்சன் ஆட்டமிழந்தபோது ஆக்ரோஷமாகக் கொண்டாடி வழி அனுப்பியது குறித்து ஒரு நிருபர் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பினார். இதனால் எரிச்சலடைந்த கோஹ்லி, ‘உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு பின்னர் வந்து இதைவிட சிறப்பான கேள்வியை கேளுங்கள். ஏதாவது சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கான இடம் இதுவல்ல. போட்டி நடுவரிடம் பேசிவிட்டேன். எந்த பிரச்னையும் இல்லை... நன்றி’ என்றார்.
* நியூசி. அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 18.05 ரன் மட்டுமே எடுத்தது. இது டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் 3வது மிக மோசமான செயல்பாடாக அமைந்தது. முன்னதாக 1969-70ல் நியூசி. அணி இந்தியா வந்து விளையாடிய தொடரில் 16.61 ரன்னும், 2002-03ல் இந்திய அணி நியூசி. சென்று விளையாடிய தொடரில் 13.37 ரன்னும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* மோசமான பார்மில் இருக்கும் கோஹ்லி, நியூசி. டெஸ்ட் தொடரில் சராசரியாக 9.50 ரன் மட்டுமே எடுத்துள்ளார். 4 இன்னிங்சில் அவரது ரன் குவிப்பு விவரம்: 2, 19, 3, 14. இதற்கு முன் 2017ல் நடந்த பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் 5 இன்னிங்சில் 46 ரன் எடுத்திருந்தார் (சராசரி 9.20).
* கொல்கத்தாவில் கர்நாடகா அணியுடன் நடக்கும் ரஞ்சி அரை இறுதியில், பெங்கால் அணி 2வது இன்னிங்சில் 161 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 312). கர்நாடகா முதல் இன்னிங்சில் 122 ரன்னுக்கு சுருண்டிருந்தது. 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தும் அந்த அணி 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்துள்ளது.
* குஜராத் அணியுடன் ராஜ்கோட்டில் நடக்கும் ரஞ்சி அரை இறுதியில், சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 66 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறி வருகிறது. முன்னதாக, முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 304 ரன்னும், குஜராத் 252 ரன்னும் எடுத்தன.
* வெஸ்ட் இண்டீசுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி பல்லெகெலே மைதானத்தில் நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும், ஆஸ்திரேலியா 4 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தின.
* இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ள தென் ஆப்ரிக்க அணி விவரம்: டி காக் (கேப்டன்), பவுமா, வான் டெர் டஸன், டு பிளெஸ்ஸி, கைல் வெரினி, ஹெய்ன்ரிச் கிளாசன், மில்லர், ஜான் ஸ்மட்ஸ், பெலுக்வாயோ, என்ஜிடி, லுதோ சிபம்லா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், நோர்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மகராஜ்.



Tags : ICC World Test Championship Statistics
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...