×

சூப்பர் டிவிஷன் ஹாக்கி சென்னையில் தொடக்கம்

சென்னை: சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.
ஏ பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜிஎஸ்டி வரி, தமிழக காவல்துறை, ஏஜிஎஸ், சென்னை துறைமுகம், எஸ்பிஐ, இந்திரா காந்தி நினைவு ஹாக்கி மன்றம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் சாய், வருமான வரி, ஐசிஎப், எப்சிஐ, எஸ்டிஏடி, ரயில்வே, ஏபிஎம் இன்போடெக், சென்னை பெருநகர காவல்துறை ஆகிய அணிகள் களமிறங்குகின்றன. பி பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சாய்) 2-0 என்ற கோல் கணக்கில் ஏபிஎம் இன்போடெக் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் யோகேஷ்வரன், லோகேஷ் கோல் அடித்தனர்.

மற்றொரு போட்டியில் தமிழக காவல்துறை அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை எளிதாக வென்றது. அந்த அணியின் ராஜேஷ், மரிய ஸ்டாலின், ரகு ஆகியோர் கோல் போட்டனர். முன்னதாக நடந்த விழாவில் காவல்துறை துணை ஆணையர் ஜி.தர்மராஜன் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒலிம்பியன் வி.பாஸ்கரன் மற்றும் சென்னை ஹாக்கி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.Tags : Chennai , Super Division Hockey, Chennai
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது