×

உள்நாட்டில் பறக்கும் விமானங்களில் வை-பை வசதி

புதுடெல்லி: உள்நாட்டு விமானங்களில் வை-பை வசதி வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டு விமானத்தில் பயணிப்பவர்கள் லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், இரீடர் அல்லது விற்பனை சாதனத்தை பயன்படுத்தும்போது வை-பை மூலம் இணைய சேவைகளை பெறுவதற்கு விமானி அனுமதிக்கலாம். செல்போன்கள் பிளைட் மோட் அல்லது ஏர்பிளேன் மோடில் இருக்கும்போது இந்த சேவையை பயன்படுத்தலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விஸ்தாரா சிஈஓ லெஸ்லி தாங், “இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் வை-பை வசதி வழங்கும் முதல் விமானமாக தாங்கள் வாங்கியுள்ள போயிங் 7879 விமானம் இருக்கும்”  என்றார்.

Tags : facility ,flights , Domestically, on flying flights, Wi-Fi facility
× RELATED அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும்...