×

விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் ஜெயகுமார், ஓம்காந்தனிடம் 5 நாள் விசாரணை: நீதிமன்றம் அனுமதி

சென்னை: குரூப் 2ஏ, குரூப் 4 வழக்கை தொடர்ந்து விஏஓ தேர்வு வழக்கில் இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் உட்பட 22 நபர்களும், குரூப்4 தேர்வில் மோசடியாக தேர்வு எழுதிய 20 நபர்களும், விஏஓ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலர்கள் 4 பேர் என மொத்தம் இந்த மூன்று வழக்குகளிலும் 47 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று வழக்குகளும் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே விஏஓ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று பலர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அதிகாரி நாராயணன்(எ)சக்தி உட்பட இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் விஏஓ தேர்வில் 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன் ஆகியோர் பணம் பெற்று கொண்டு தேர்வில் முறைகேடாக வெற்றி பெற வைத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனை கைது செய்தனர். இருவரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த விழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது, ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடந்து சிபிசிஐடி போலீசார் இருவரையும் ரகசிய இடத்தில் ைவத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Omkandan ,Jayakumar ,trial ,Court , VAO Examination, Abuse, Jayakumar, Omkandan, 5 Days, Inquiry
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...