×

அரசுக்கு சொந்தமான வீட்டை விற்க ஓஎல்எக்ஸ் மூலம் போலி விளம்பரம்: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: திருவல்லிக்கேணியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக ஓஎல்எக்ஸ் மூலம் விளம்பரம் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீடுகள் உள்ளது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டில் முகமது காசிம் என்பவர் கடந்த 50 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த வாரம் சிலர் வந்து சுற்றி பார்த்துவிட்டு முகமது காசிமிடம் எவ்வளவு விலைக்கு இந்த வீட்டை கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது காசிம் உங்களுக்கு யார் இந்த வீட்டை விற்பனை செய்வதாக கூறியது என்று கேட்டார். அதற்கு அந்த நபர்கள் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் இந்த வீட்டின் புகைப்படத்துடன் விற்பனைக்கு என்று சாதிக் பாஷா என்பவர் பதிவேற்றம் செய்த விளம்பரத்தை காண்பித்தனர்.

அதைதொடர்ந்து முகமது காசிம் சம்பவம் குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்படி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஓஎல்எக்சில் வீட்டுடன் பதிவு செய்த சாதிக் பாஷா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி ஐஸ்அவுஸ் போலீசார் ஓஎல்எக்சில் விளம்பரம் செய்த சாதிக் பாஷா என்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Tags : OLX ,home ,mystery person , To sell , state-owned home, through OLX , fake advertising
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு