×

கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக - அமமுக மோதல்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் புதுநகரில் கூட்டுறவு சங்க (ஏ 1998)  தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த அழகர்,  முன்னாள் ஊராட்சி தலைவர் நிரஞ்சன் போட்டியிட்டதால் கோஷ்டிமோதல் ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நிரஞ்சன் அமமுகவுக்கு மாறினார். கூட்டுறவு சங்கத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருமங்கலம் டிஎஸ்பி அருண் தலைமையில், கூட்டுறவு சங்கம் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரி கோபி தலைமையில், காலை 10 மணியளவில் அதிகாரிகள் மனுக்களை வாங்க தயாராக இருந்தனர். அப்போது அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, அங்கிருந்த நாற்காலிகளை வீசி எறிந்து உடைத்தனர். இதையடுத்து போலீசார், கூட்டுறவு சங்கத்திற்குள் வந்து, இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி, அனைவரையும் வெளியேற்றினர். பின்னர் 5வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : AIADMK ,clash ,election ,union elections ,Co-operatives ,conflict , Co-operatives, union elections, AIADMK - Ammo, conflict
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ மகனிடம் ₹1.45 லட்சம் பறிமுதல்