×

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு இல்லை: மறுதேதி நிர்ணயிக்கும் வரை தூக்கிலிடுவது வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்கு இல்லை. மறு தேதி நிர்ணயிக்கப்படும் வரை 4 போரையும் தூக்கிலிருந்து நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2012ல் டெல்லியில் நடந்த மாணவி (நிர்பயா) பலாத்கார, கொலை வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வரையும் கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்களை குற்றவாளிகள் ஒவ்வொருவராக தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த கருணை மனுக்கள் குடியரசுத் தலைவராலும், சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேற்கண்ட 4 பேரையும் மார்ச் 3ம் தேதி (நாளை) காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவிட்டார். சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, கருணை மனு, மேல்முறையீட்டு மனு என குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் இருந்த நிலையில், பவன்குமார் குப்தாவை தவிர மற்றவர்கள் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி விட்டனர்.

இதனிடையே பவன் குமார் குப்தாவும், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக‌ சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்ததால், மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மீண்டும் மாற்றப்படலாம் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப். நரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷண் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு முன், பவன் குமாரின் (25) சீராய்வு மனு இன்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமர்வு பவன் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதனால், பவன்குமார் குப்தா உள்ளிட்ட 4 பேரும் நாளை காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. டெல்லி திகார் சிறையில் உயர்மட்ட பாதுகாப்பில் அடைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கான வாய்ப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், அவர்கள் ஒருவித பதட்டத்துடன் இருப்பதாக சிறைதுறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தும், இந்த வழக்கில் மரண தண்டனை குற்றவாளி பவன்குமாருக்கு மட்டும் ஒரு இறுதி சட்ட தீர்வு மட்டும் மீதமிருந்தது. அதாவது, ஜனாதிபதியிடம் மீண்டும் கருணை மனுவை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. மீதமுள்ள மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்துள்ளார்.

அதனால், இன்று ஜனாதிபதியிடம் பவன்குமார் குப்தா கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. அதன்படி உச்சநீதிமன்றம் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் குப்தா இன்று ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். பவன்குமாரின் கருணை மனு, முகேஷின் 2வது கருணை மனு, குடியரசு தலைவரிடம் நிலுவையில் உள்ளது. இந்த கருணை மனு அனுப்பி உள்ளதை குறிப்பிட்டு குற்றவாளி பவன்குமார் குப்தாவை தூக்கிலிடுவதை தள்ளிவைக்க கோரியிருந்தார் வழக்கறிஞர். நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை தூக்கு இல்லை.

மறு தேதி நிர்ணயிக்கப்படும் வரை 4 போரையும் தூக்கிலிருந்து நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை காலை 6 மணிக்கு தூக்கிலிட இருந்த நிலையில் 3-வது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிர்பயாவின் தாய் பேட்டி
டெல்லி: ஒரு போதும் பின்வாங்க போவதில்லை, தூக்கு தண்டனை பெற்று கொடுத்தே தீருவேன் என  நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கே அரசியலமைப்பு ஆதரவு தருகிறது. குற்றவாளிகளை தூக்கிலிட நீதிமன்றம் தனது சொந்த உத்தரவை நிறைவேற்ற ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மரணதண்டனை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பது எங்கள் அமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது எனவும் கூறியுள்ளார். 


Tags : Delhi ,court ,court announcements ,convicts , Nirbhaya is guilty, not convicted, Delhi court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...