×

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு: பனியனை பிடித்து இழுத்ததால் சிவப்பு அட்டை

பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான அரையிறுதியின் முதலாவது சுற்று பெங்களூருவில் நேற்றிரவு நடந்தது. இந்த ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டேவிட் வில்லியம்ஸ் பந்தை வலைக்குள் அனுப்பிய நேரத்தில், சக வீரரிடம் இருந்து பந்தை பெற்ற போது கையால் கையாண்டது தெரியவந்ததால், இதை கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். அதன்பின், 31வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் டேஷோர்ன் பிரவுன் கோல் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். 80வது நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் முடியவில்லை.

84வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணாவை கோல் பகுதியில் வைத்து பனியனை பிடித்து இழுத்து தள்ளிவிட்ட பெங்களூரு வீரர் நிஷூ குமார் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஒரு வீரர் குறைந்த நிலையில் கடைசி கட்டத்தில் பெங்களூரு சமாளித்துக் கொண்டது. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது. வருகிற 8ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் அரைஇறுதியின் 2வது சுற்றில் இவ்விரு அணிகளும் மீண்டும் மோதும். இதில் டிரா செய்தாலே பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். அதே நேரத்தில் கொல்கத்தா அணி 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

Tags : Bengaluru ,Series Bengaluru ,ISL Football ,Kolkata ,ISL Football Series ,Kolkata Knight Riders , ISL Football, Kolkata, Bangalore
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை