×

திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் உயிரிழந்ததை அடுத்து குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பினார். திமுக எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் உயிரிழந்ததால் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே 25ஆம் தேதியுடன் இந்த ஆட்சி முடிகிறது என்பதால், 6 மாத காலத்திற்குள் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

கடந்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி திருவொற்றியூர் திமுக எம்எல்ஏவான கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததார். அவர் மரணமடைந்த மறுநாள் காலையிலேயே (பிப். 28) வேலூர் மாவட்டத்தில் இருக்கும், குடியாத்தம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ வாக காத்தவராயன் என்பவர் உயிரிழந்தார். இவர் கடந்த மே மாதம் 2019 இல் நடைபெற்ற 18 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். காத்தவராயன் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் காத்தவராயன் உயிரிழந்ததும், அடுத்தடுத்து நாட்களில் இரண்டு எம்.எல்.ஏக்கள் உயிரிழந்தது திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர், வேலூர் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு. இந்த இரண்டு தொகுதிகளிலும் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இன்றைய தேதியில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுதேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் மேல் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அதிவிரைவில் அதாவது ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின்படி விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : KPP Sami ,DMK ,demise ,Kattavarayan ,KPPSamy ,vacation ,Gudiyatham ,Thiruvottiyur ,Kathavaarayan Govt ,assembly , DMK, KPPSamy, Kadavarayaan, Gudiyatham, Thiruvottiyur, Assembly
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...