×

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: நீச்சல் குளத்தில் டிரை ஐஸ் கொட்டி விளையாடிய 3 பேர் உயிரிழப்பு!

மாஸ்கோ: ரஷ்யாவில் இளைஞர்களின் சிலரின் விபரீத விளையாட்டால் பிறந்தநாள் விழா சோகத்தில் முடிவடைந்துள்ளது. மாஸ்கோவில் வசிக்கும் இன்ஸ்டாகிராம் பிரபலமான எகடெரினா டிடென்கோ என்பவர், தமது பிறந்தநாளையொட்டி நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அப்போது, திரைப்படங்களில் வருவது போன்று செயற்கை புகை சூழலை ஏற்படுத்துவதற்காக நீச்சல் குளத்தில் 30 கிலோ அளவுக்கு டிரை ஐஸ் என்று அழைக்கப்படும் திட கார்பன் டை ஆக்ஸைடு கொட்டப்பட்டுள்ளது.

நீருடன் சேர்க்கப்பட்ட டிரை ஐஸ் காரணமாக ஆபத்தான வேதியியல் மாற்றமடைந்திருப்பதை அறியாத இளைஞர்கள் 9 பேர் நீச்சல் குளத்தில் குதித்துள்ளனர். இதில், எகடெரினா டிடென்கோவின் கணவர் உள்பட 3 பேர் ரசாயன காயம் மற்றும் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் டிரை ஐசுக்குள் ஆபத்து மறைந்திருப்பதை அறியாமல் இளைஞர்கள் பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Swimming Pool ,Dry Ice Pitcher ,hospital , Russia, Moscow, dry ice, swimming pool,casualties
× RELATED தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா?.....