×

விமானங்களில் பயணிகளுக்காக வைஃபை வசதி அளிக்க மத்திய அரசு அனுமதி: ஃபிளைட் மோடில் வைத்து பயன்படுத்த உத்தரவு

டெல்லி: விமானங்களில் பயணிகளுக்காக வைஃபை வசதி அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இயங்கும் விமானங்களில் செல்லும் பயணிகளுக்காக விமானத்திலேயே வைஃபை வசதிகளைச் செய்துதர விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செல்போன் இன்று அத்தியாவசியத் தேவையாகியுள்ள நிலையில் வெளியூர் செல்லும் மக்களுக்காக ரயில் நிலையங்களில் மட்டுமின்றி ரயில்களிலும் வைஃபை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சில ஆம்னி பேருந்துகளிலும்கூட வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளுக்காக விமானங்களிலும் வைஃபை வசதி செய்து தர, விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியுள்ளதாவது: பயணிகள் விமானத்தில் பயணிப்பவர்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விமானத்தின் பைலட்கள் இதனை அனுமதிக்கலாம். விமானத் தளத்தில் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் விமான நிறுவனங்கள் வைஃபை சாதன வசதியைச் செய்து தரலாம். லேப்டாப், செல்போன்கள், டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ்.சாதனங்கள் ஆகியவற்றுக்கு வை-ஃபை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த வசதியை ஃபிளைட் மோடில் வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : passengers ,flights ,government , Flights, Wi-Fi Facility, Federal Government, Blythe Mode
× RELATED தொடர் மழை மற்றும் மோசமான வானிலை...