×

உ.பி.-யில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. காய்ச்சல் காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழந்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் எவ்வாறெல்லாம் பரவும் என்று தெரியாமலும், எந்த விதமான சிகிச்சை பெற வேண்டும், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் மக்கள் அச்சம் அடைகின்றனர். இதனை தொடர்ந்து, வேகமாக பரவிவரும் பன்றி காய்ச்சலை தடுக்க காய்ச்சலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மீரட் நகரில் மாகாண ஆயுதப்படையிடர் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

அவர்களில் 17 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளதால் அவர்களை தனிமைப்படுத்தவும், குறிப்பிட்ட வீரர்கள் வெளியில் செல்லவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மீரட் நகரில் மட்டும் இதுவரை 78 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமைகளை சமாளிக்க மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு மருந்துகள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலைமை குறித்து அறிய அம்மாநில அரசு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.


Tags : UP ,Swine flu outbreak , UP, swine flu, death toll rises to 12!
× RELATED காதலை கைவிடாததால் ஆத்திரம்: கழுத்தை வெட்டி டிரைவர் படுகொலை