×

தருமபுரி மாவட்டத்தில் லங்கர்கட்டை சூதாட்டம் அமோகம்..:காவல்துறை அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கிராமங்களை குறிவைத்து நடைபெறும் லங்கர்கட்டை சூதாட்டத்தை ஒழித்து கட்ட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சோமேனஹள்ளி, கோவிலூர், பாப்பாரபட்டி உள்பட பல்வேறு இடங்களில் இந்த லங்கர்கட்டை சூதாட்டம் தலைவிரித்து ஆடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.இதற்காக காவல்துறை துணையுடன் கிராமங்களில் உள்ள கோவில்களை குறிவைத்து 18 நாட்கள் நடைபெற கூடிய மகாபாரத நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர். இதன் அருகிலேயே லங்கர்கட்டை உருட்டு விளையாட்டு எனப்படும் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை தினந்தோறும் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து பணம் பார்க்கும் விவசாயிகளை குறிவைத்து இந்த சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதில் பல விவசாயிகள் பணம் வைத்து சூதாடுவது மட்டுமல்லாமல் தங்களது வாகனங்கள், நகைகள் ஆகியவற்றை வைத்து சூதாடி பொருட்களை இழக்கின்றனர். சிலர் தாலியை வைத்து சூதாடும் நிகழ்வுகளும் நடந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சூதாட்டத்தில் ஒரு நாள் இரவில் லட்சக்கணக்கில் பணம் புரல்வதும் தெரியவந்துள்ளது. ஏழை எளிய மக்களின் வாழக்கையை சீரழித்து வரும் இந்த சூதாட்டத்தை காவல்துறை அதிகாரிகள் பணம் பெற்று உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சூதாட்டம் நடைபெறும் இடத்தில் முறையாக சோதனை நடத்தி அதனை அடியோடு ஒழித்துக்கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும் .


Tags : district ,Darumapuri ,Police officers , Lanarkadu ,gambling, scandal, complicity
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...