×

இலவச கலர் டிவி மர்மநபர்களால் உடைப்பு: விசாரணை நடத்த கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருக்கும் அரசு இலவச தொலைகாட்சி பெட்டிகளை மர்மநபர்கள் உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியின்போது இலவச வண்ணத்தொலைக்காட்சி திட்டம் அறிவிக்கபட்டு அனைத்துதரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது. அதன்பின் 2011ம் நடந்த சட்ட மன்ற தேர்திலில் அதிமுக அதிக இடங்கனை பெற்று ஆட்சி அமைத்தது. இதனால் முந்தைய திமுக அரச திட்டம் என்பதால் கலர் டிவி வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு தமிழகம் முழுவதிலும் கிடப்பில் போட்டது.
 இதன் ஒருபகுதியாக திருப்பூரில் மீதமுள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை மாநகராட்சியின் கட்டுபாட்டில் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராயபுரம் ரோட்டில் உள்ள நஞ்சப்பா ஆண்கள் மாநகராட்சி பள்ளியின் வளாகத்தில் உள்ள விடுதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கென இரவு நேர காவலாளி ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பள்ளியின் சுவர் ஏறிக்குதித்து வந்த மர்மநபர்கள் வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளை எடுத்து அவற்றை உடைத்து பள்ளி வளாகத்தை சுற்றியும் வீசிச்சென்றுள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பல முறை மனு அளித்தும் அதன் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மாநகராட்சி கமிஷ்னர் சிவக்குமாரிடம் கேட்டபோது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலர்டிவி அங்கு உள்ளது.  அந்த அறையின் சாவிகள் வருவாய் துறையினரிடம் தான் உள்ளது. தற்போது மர்மநபர் உடைத்த ெபட்டிகளையும் பள்ளிவளாகமும் கண்காணிக்கப்படும்,’’ என்றார்

Tags : Breakup , Free Color TV,Breakdown , Mysteries,Investigate: Request
× RELATED வாட்ஸ்அப்பில் ‘காதல் தோல்வி’...