×

கோடை காலம் தொடங்கி விட்டது அண்ணாமலையார் கோயிலில் தரைவிரிப்பான் போடப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோடை காலம்தொடங்கி விட்டதால் பக்தர்களின் வசதிக்காக தரைவிரிப்பான் விரிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள் ேதாறும் திரளான பக்தர்கள் வந்து இங்குள்ள உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்கள்.

பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் அதிகரித்து வருகிறது.
 இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள்  நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றி வழிபட்டனர். வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கார், வேன், பஸ்களில் அண்ணாமலையாரை தரிசிக்க வந்திருந்தனர். தற்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிகாக தரைவிரிப்பான் விரிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

Tags : summer season ,Annamalaiar , summer season , begun
× RELATED வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை...