×

நியூசிலாந்து அணி எதிரான 2-வது டெஸ்ட் போட்டி..: ஒருநாள் தொடரை தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒயிட்வாஷ்

கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஒருநாள் தொடரை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரிலும் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது.

இந்தியா முதல் இன்னிங்சில் 242 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (63 ஓவர்). பிரித்வி, புஜாரா, விஹாரி அரை சதம் அடிக்க,  மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேமிசன் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன் எடுத்திருந்தது. லாதம் 27 ரன், பிளண்டெல் 29 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பிளண்டெல் 30  ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார்.

டெய்லர் 15, லாதம் 52 ரன் (122 பந்து, 5 பவுண்டரி), நிகோல்ஸ் 14 ரன் எடுக்க... வாட்லிங், சவுத்தீ டக் அவுட்டாகி வெளியேறினர். நியூசிலாந்து அணி 50.5 ஓவரில் 153 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் பொறுப்புடன் விளையாடிய கிராண்ட்ஹோம் 26 ரன், நீல் வேக்னர் 21 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இளம் வீரர் ஜேமிசன் 49 ரன் (63 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஷமி வேகத்தில் பன்ட் வசம் பிடிபட, நியூசிலாந்து அணி முதல்  இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (73.1 ஓவர்). இந்திய பந்துவீச்சில் ஷமி 4, பூம்ரா 3, ஜடேஜா 2, உமேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.

மேலும் 2-வது இன்னிங்ஸில் அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர்கள் டாம் ப்ளண்டன் 55 ரன்களும், டாம் லாதம் 52 ரன்களும் எடுத்துள்ளனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா- 242/10, நியூசிலாந்து 235/10, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 124/10 நியூசிலாந்து 132/3 ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக  இந்தியா அணி தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Test match ,New Zealand , 2nd Test match ,New Zealand ..
× RELATED சில்லி பாயின்ட்...