×

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிவு: வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.28, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதனை அடுத்து இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.28 காசுகளாக உள்ளது.

மேலும் டீசல் நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.65 காசுகளாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்கள் வாங்கு வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு 50 கீலோமீடர் துாரம் வாகனங்களை இயக்குபவர்களுக்கு கூடுதாலக ரூ.100-ல் இருந்து ரூ.150 வரை அதிகரி க்கிறது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 வரை செலவு அதிகரிக்கிறது. இந்நிலையில் வாகனங்கள் வாங்க முடிவு செய்தவர்கள் தங்கள் முடிவுகளை தற்போது நிறைவேற்றாமல் தள்ளிபோட்டு வருகின்றனர். இதனால் வாகனங்களின் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




Tags : Motorists , Petrol ,diesel, prices , relieved
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...