×

பணி மூப்பு அடிப்படையில் தகுதிவாய்ந்த கோயில் ஊழியர்களுக்கு பணி உயர்வு

சென்னை: பணி மூப்பு அடிப்படையில் தகுதிவாய்ந்த கோயில் ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் கமிஷனருக்கு மனு அளித்துள்ளனர். இதுகுறித்து குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட கோயில்களில் நீண்ட காலங்களாக பணியாற்றி வரும் கோயில் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் காலி பணியிடங்களில் பணி உயர்வு வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் கடந்த 2006ல் கோயில் பணியிடங்களில் பணிபுரிந்து வந்த 7 நபர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 131 அலுவலக பணியிடங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளது. 2015 ஆகஸ்ட் 30ம் தேதி சட்டசபையில் 110 பிரிவின் படி 65 பணியிடங்களாக மாற்றி அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த அலுவலக பணியிடங்களில் 28 பணியாளர்களே பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள பணியிடங்களில் கோயில் பணியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்த நிரந்த ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும். 2012ல் எடுக்கப்பட்ட கோயில் பணியாளர்களின் பணி மூப்பு பட்டியலின்படி 138 பணியாளர்கள் தகுதிவாய்ந்த பணியாளராக உள்ளது. அன்றைய இணையாளர்களை பணி மூப்பு பட்டியலில் உள்ள 5 பணியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க இவ்வலுவலகத்தில் மனு அனுப்பபட்டுள்ளது. ஆனால், அந்த பணியாளர்களை இந்த நாள் வரையிலும் பணி உயர்வு வழங்கப்பட்டதில்லை.

குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் 2019 மே மாதம் 3ம் தேதி அனுப்பி மனுவின் படி  எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது குமரி மாவட்ட கோயில் அலுவலக காலிபணியிடங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாளர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நீண்ட காலங்களாக கோயில்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பணி உயர்வு தடை ஏற்படும். எனவே, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுகளுக்கு எதிராக உள்ள பணி நியமனத்தை தடை செய்து சொற்ப ஊதியத்தில் நீண்ட காலங்களாக கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் பணியாற்றி கோயில் ஊழியர்களுக்கு பணி  மூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும்.


Tags : temple staff ,work force ,Temple , Elderly Basic, Qualified Temple, Employees, Promotion
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்