×

3 ஆண்டில் ஓடும் ரயில்கள், ரயில் நிலையங்களில் 165 பாலியல் பலாத்கார வழக்குபதிவு: ஆர்டிஐ அறிக்கை தகவல்

புதுடெல்லி: ஓடும் ரயில், ரயில் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 165 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓடும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் நடக்கும் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள், அநீதிகள் குறித்த விவரங்களை, மத்திய பிரதேசத்தின் நீமுச் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரி இருந்தார். இது தொடர்பாக ஆர்டிஐ.யில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு: கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் ஓடும் ரயில்களில் 136, ரயில் நிலையங்களில் 29 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பதிவான 44 வழக்குகளில் 8 ஓடும் ரயிலிலும், 36 ரயில் நிலையங்களிலும் பதிவாகி உள்ளன. இதேபோல், 2018, 2017ம் ஆண்டுகளில் பதிவான 70, 51 பாலியல் வழக்குகளில் முறையே 59, 41 ஓடும் ரயிலிலும், 11, 10 வழக்குகள் ரயில் நிலையங்களிலும் நடந்துள்ளன. இவை தவிர, இந்த குறிப்பிட்ட 3 ஆண்டுகளில் பாலியல் பலாத்காரம் அல்லாத, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓடும் ரயிலில் 802, ரயில் நிலையங்களில் 870 என மொத்தம் 1,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 771 ஆள் கடத்தல், 4,718 கொள்ளை, 213 கொலை முயற்சி, 542 கொலைகள் உள்ளிட்ட வழக்குகளும் ஓடும் ரயில், ரயில் நிலையங்களில் நடந்துள்ளதாக பதிவாகி உள்ளன.

கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்த 1,39,422 மற்றும் 1,14,170 ஆண் பயணிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 2019 நவம்பர் மாதம் வரை 2019 பெட்டிகளிலும், 2019 டிசம்பர் வரை 511 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : rape ,train stations ,RTI , Train stations, 165 rape cases, RTI report, information
× RELATED காவல் துறை அதிகாரியாக அண்ணாமலை என்ன...