×

‘அபாச்சி’க்கு இணையான நவீன ஹெலிகாப்டர்களை தயாரிக்க எச்ஏஎல் திட்டம்: ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கின

புதுடெல்லி: போயிங் நிறுவனத்தின் அபாச்சி ஹெலிகாப்டர்களுக்கு இணையான நவீன ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் திட்டத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) இறுதி செய்துள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ‘துருவ்’ என்ற இலகு ரக ஹெலிகாப்டர்கள், சேட்டக் ஹெலிகாப்டர்கள் மற்றும் தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை எச்ஏஎல் நிறுவனம் தயாரித்து வருகிறது. விமானப்படை பயன்பாட்டுக்கு அமெரிக்காவிடம் இருந்து அபாச்சி, சினுக் ரக நவீன ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் வாங்கப்பட்டன. மேலும் பல ஹெலிகாப்டர்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இறக்குமதியை குறைப்பதற்காக, அபாச்சி ஹெலிகாப்டர்களுக்கு இணையான நவீன ஹெலிகாப்டர்களை தயாரிக்க எச்ஏஎல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து எச்ஏஎல் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மாதவன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: போயிங் நிறுவனத்தின் அபாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களுக்கு இணையான நவீன ஹெலிகாப்டர்களை 2027ம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விட்டன. வரும் ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் இறக்குமதியை நிறுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம். புதிய ஹெலிகாப்டருக்கான முதல்கட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். இத்திட்டத்துக்கு மத்திய அரசு இந்தாண்டு அனுமதி அளித்தால், மாதிரி ஹெலிகாப்டர் 2023ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும்.

2027ம் ஆண்டுக்குள் முதல் ஹெலிகாப்டர் தயாராகிவிடும். இரட்டை இன்ஜினுடன் கூடிய இந்த ஹெலிகாப்டர், 10 முதல் 12 டன் எடை உள்ளதாக இருக்கும். இதற்கு ரூ.9,600 கோடி தேவைப்படும். முதல் கட்டமாக 500 ஹெலிகாப்டர்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

Tags : HAL ,Apache , Modern helicopters, make, HAL, plan
× RELATED சபரிமலையில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்..!!