×

கொரோனாவால் பாதிப்பு விமான வருவாய் சரிவு வேலைக்கு ஆபத்து

துபாய்: கொரோனா வைரஸ் பீதியால் பல வர்த்தகங்கள் முடங்கிய நிலையில், விமான போக்குவரத்தும் கடுமையாக சரிந்து வருகிறது. இதனால், எமிரேட் போன்ற முன்னணி நிறுவனங்களும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.   துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கும் எமிரேட் சர்வதேச விமான போக்குவரத்தில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனம். பல நாடுகளுக்கு விமான போக்குவரத்தை நடத்தும் இந்த நிறுவனத்தை அரசின் பங்குகள் அதிகம். ஒரு லட்சம்  ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 21 ஆயிரம் விமான தொழில்நுட்ப ஊழியர்களும், 4000 விமானிகளும் உள்ளனர்.   சீனாவில் இருந்து 56 நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய, மற்றும் அரபு நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை  சற்று  குறைந்துள்ளது. இதனால், எமிரேட் போன்ற விமான நிறுவனங்களின் வருவாய் குறைந்து வருகிறது.   இதே நிலை தொடர்ந்தால், ஊழியர்கள்  ஊதியம் இல்லாமல் பணியில் இருந்து நீண்ட நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நிர்வாக  தரப்பி–்ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக ஊழியர்களுக்கு இ மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நமது நிறுவனத்தின் வர்த்தகம் வெகுவாக குறைந்துவருகிறது. இதனால், நாம் பணி செய்வதிலும் சற்று மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. நேரடி  பணியில் தேவைப்படாத ஊழியர்கள் ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். நிலைமை சீரடையும் வரையில் இந்த நிலை தொடரும். தாங்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அந்த இ மெயில்  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எமிரேட் நிறுவனம், விமான போக்குவரத்து  மட்டுமின்றி, விமான பயண நிறுவனம் மற்றும் விமான நிலைய சேவைகளும் செய்து வருகிறது.  அந்த வர்த்தகங்களும் முடங்கி வருகின்றன. அதனால் வேறு வழியி–்ல்லாமல் தற்காலிக  நடவடிக்கையாக நீண்ட விடுப்பு தரும் முடிவை எடுத்துள்ளது.

அடுத்தடுத்து ரத்து
எமிரேட் விமான நிறுவனம், சீனாவில் எந்த பகுதிக்கும் விமான சேவை செய்யவில்லை; கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து விமான சேவைகளை ரத்து செய்து விட்டது. ஈரானில் வைரஸ் பரவியதை அடுத்து, அங்கும் விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. இதுபோல, மற்ற நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தாவிட்டாலும், பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

Tags : Corona Airline , Damage ,Corona, Airline ,declines
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...