மெக்சிகன் ஓபன் நடால் சாம்பியன்

அகாபல்கோ: மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதிய நடால் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 14 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் நடால்  ஏற்கனவே 2005, 2013ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அவர் ஒற்றையர் பிரிவில் வென்ற 85வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: