×

ரஞ்சி கோப்பை அரை இறுதி பெங்காலுக்கு வெற்றி வாய்ப்பு

கொல்கத்தா: கர்நாடகா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரை இறுதியில் பெங்கால் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீசியது. பெங்கால் முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது (92 ஓவர்). மஜும்தார் ஆட்டமிழக்காமல் 149 ரன் விளாசினார். அடுத்து  களமிறங்கிய கர்நாடகா முதல் இன்னிங்சில் 122 ரன்னுக்கு சுருண்டது. கே.எல்.ராகுல் 26, கிருஷ்ணப்பா கவுதம் 31, அபிமன்யு மிதுன் 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பெங்கால் பந்துவீச்சில் இஷான் போரெல் 5,  ஆகாஷ் தீப் 3, முகேஷ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

190 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி, 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்துள்ளது. சுதிப் சாட்டர்ஜி 40, மஜும்தார் 1 ரன்னுடன் களத்தில்  உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, பெங்கால் 262 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் கர்நாடகாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குஜராத் தடுமாற்றம்: சவுராஷ்டிரா அணியுடன் ராஜ்கோட்டில் நடக்கும் அரை இறுதியில், குஜராத் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து திணறி வருகிறது. முன்னதாக, சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 304 ரன்  குவித்து ஆல் அவுட்டானது.

Tags : Bengal ,semi-final ,Ranji Cup , Ranji Cup, semi-final, Opportunity ,Bengal ,win
× RELATED அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை...