×

ஐசிசி மகளிர் டி20: அரை இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

சிட்னி: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், 46 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.ஷோகிரவுண்டு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன் குவித்தது. நதாலியே ஸ்கிவர் 57 ரன், வியாட் 29, கேப்டன் ஹீதர் நைட் 17 ரன் எடுத்தனர். ஏமி  ஜோன்ஸ் 23, கேதரின் பிரன்ட் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17.1 ஓவரில் 97 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. 46 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

தென் ஆப்ரிக்கா தகுதி: மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய தென் ஆப்ரிக்கா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்;  பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன். பி பிரிவில் இங்கிலாந்து 4 லீக் ஆட்டத்தில் 6 புள்ளிகள் பெற்ற நிலையில், தென் ஆப்ரிக்கா ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம்  எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.




Tags : semi-finals ,England , ICC Women, T20,Semi-Final, ,England
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்