×

சிறுமியை பலாத்காரம் செய்த கேரள பாதிரியார் சபையிலிருந்து டிஸ்மிஸ்: போப் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணி ஆக்கிய பாதிரியார் ராபின் மேத்யூவை சபையில் இருந்து போபாண்டவர் டிஸ்மிஸ் செய்துள்ளார்.கேரள மாநிலம் வயநாடு நடவயல் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி என்ற ராபின் மேத்யூ(48). இவர் மானந்தாவடி சபை கட்டுப்பாட்டில் உள்ள கண்ணூர மாவட்டம் கொட்டியூரில் உள்ள செயின்ட் செபாஸ்டியன்ஸ் ஆலய  பாதிரியாரகவும் அங்குள்ள சபைக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளி மேலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு சர்ச்சுக்கு பிரார்த்தனை செய்ய வந்த சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார்.  இதில் கர்ப்பமடைந்த சிறுமிக்கு வயநாட்டில் உள்ள கத்தோலிக்க சபைக்கு ெசாந்தமான மருத்துவமனையில் பிரசவம் பார்த்துள்ளார்.

இந்த தகவல் கண்ணூர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரிய வந்தது. இதில் பாதிரியாரின் குட்டு வெளிப்பட்டது. இதுதொடர்பான வழக்கில்,பாதிரியாருக்கு 60 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இதனால், பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரியை வயநாடு சபை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அவரை கத்தோலிக்க சபையில் இருந்தே டிஸ்மிஸ் செய்து போபாண்டவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : clergy ,Kerala ,church ,Pope ,clergy council , little, girl, Dismiss, Kerala clergy,council,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...