×

கோயில் குளம் சீரமைப்பு

பெரம்பூர்: வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான இரவீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் ராஜராஜ சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோயில் குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பச்சை நிறமாக காட்சி அளிப்பதாக கடந்த மாதம் 27ம் தேதி ‘தினகரன்’ நாளிதழில்  படம்  வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரவீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் திருக்கோயில் மேலாளர் தனசேகர் கடந்த 3 நாட்களாக 10க்கும் மேற்பட்ட பணியாட்களை கொண்டு கோயில் குளத்தில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி, குளத்தை சீரமைத்தனர்.


Tags : Temple Pond ,Temple Pond of Renovation , Renovation ,Temple Pond
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...