×

குட்கா கடத்திய வாலிபர் கைது

புழல்: செங்குன்றம் மார்க்கெட் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது புழல் பகுதியில் இருந்து செங்குன்றம் நோக்கி பைக்கில் வந்த வாலிபரை மடக்கி, விசாரணை நடத்தினார். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவரது பைக் பெட்டியை திறந்து சோதனை செய்தனர்.

அதில், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட 6 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த துரைசாமி (37) என்பதும், ஆந்திராவில் இருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்து, செங்குன்றம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.அவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.



Tags : Kutka Kutka ,plaintiff , Kutka ,kidnapped, plaintiff ,arrested
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது