×

நடுவானில் பறந்த விமானத்தில் மாரடைப்பால் பயணி திடீர் சாவு

மீனம்பாக்கம்: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த விமானிக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு விமானத்திலேயே உயிரிழந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்டிகே ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது. விமானத்தில் மொத்தம் 147 பயணிகள் இருந்தனர். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த வைத்தியநாதன் (74) என்பவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே அவருக்கு அவசர சிகிச்சை தரவேண்டி இருப்பதால் விமானம் தரையிறங்க தயார் நிலையில் இருக்கும் படி கூறினார்.

மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். விமானம் 6 மணிக்கு தரை இறங்கியது. மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி பயணியை சோதித்தனர். அவர் கடுமையான மாரடைப்பால் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு விமான நிலைய போலீசார் வந்து அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கோடம்பாக்கத்தைச்  சேர்ந்த இவர் தனது மனைவியுடன் திரும்பி வரும் போது இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. 


Tags : death ,heart attack passenger ,heart attack traveler , mid-flight, Sudden death , heart attack, traveler
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...