×

அறநிலையத்துறையில் இ-சேவை முடக்கம்: பக்தர்கள் திண்டாட்டம்

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்கள் வசதிக்காக இணையதள சேவை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இ-பூஜா, இ-தங்கும் அறை, இ-அன்னதானம், இ-ரதம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் மூலம் பக்தர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த இணையதள பிரிவு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் இந்த இ-சேவை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவசர, அவசரமாக அறநிலையத்துறை சார்பில் முதற்கட்டமாக 5 கோயில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அறநிலையத்துறை சார்பில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவரின் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் இ-சேவை திட்டத்தை கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய  தொழில்நுட்ப அறிவு இல்லாத காரணத்தால், இந்த திட்டத்தை விரிவுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இசேவை திட்டத்தை பயன்படுத்த முடியாமல் பக்தர்கள் திண்டாடி வருகின்றனர். இதை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் சிலர் முறைகேடாக கோயில் இணையதளம் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பக்தர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : devotees , Department of Charity, E-Service Freeze, Devotees, Dindigam
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...