×

அகதிகளாக வருவோருக்கு மட்டும்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்: CAA- ஆதரவு பேரணியில் அமித்ஷா விளக்கம்

கொல்கத்தா: ஏப்ரல்-மே மாதங்களில் மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கட்சி மேற்கு வங்கத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் கடந்த தேர்தலில் 18 இடங்களைப் பிடித்தது; அதே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்; அகதிகளாக வருவோருக்கு மட்டும்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்.

சிறுபான்மையினருக்கு குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறினார். மமதா பானர்ஜி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி, குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த போது மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரசும் இடதுசாரிகளும் இணைந்து எதிர்க்கின்றன. மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாங்கள் முயற்சிக்கும் போது ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

மம்தாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தில் வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளன. சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்குவதற்கு தான் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியால் தடுத்துவிட முடியாது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இதனை மம்தாவால் தடுக்க முடியாது. எங்களை தடுக்க மம்தா, தன்னால் ஆன முயற்சியை செய்யட்டும். பா.ஜ., மீது மாநில மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இங்கு, 40 தொண்டர்களை பா.ஜ., இழந்துள்ளது. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். வாரிசு அரசியலுக்கு இங்கு இடமில்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : CAA ,Rally , Refugee, Citizenship Amendment Act, Amit Shah
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்