- மாண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கோடை விழா
- தமிழ்நாடு சவுந்தரராஜன்
- மண்டைக்காடு பாகவத்யமன் கோயில் மாசிக்கோடு
குளச்சல்: குமரியில் பிரசித்திபெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடைவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான மாசிக்கொடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, சிறப்பு செண்டை மேளம் ஆகியவை நடந்தன. 7.50 மணியளவில் திருக்கொடியேற்றம் நடந்தது.
இதில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஜயகுமார் எம்.பி., கலெக்டர் பிரசாந்த் ஏம்.வடநேரே, எஸ்.பி. நாத், சப்-கலெக்டர் சரண்யா அறி, ஏ.எஸ்.பி விஸ்வேஸ் பி.சாஸ்திரி, திருக்கோயில்கள் இணை ஆணையர் அன்புமணி, கோயில் தந்திரி மகாதேவரு ஐயர், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு, கல்குளம் தாசில்தார் ராஜாசிங், பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ். துணைத்தலைவர் சிவகுமார், தேவி கலா மன்றம், தேவி சேவா சங்கம் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் 83வது சமய மாநாடு கொடியை தலைவர் கந்தப்பன் ஏற்றி வைத்தார். வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மாநாடை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். சுவாமி கருணானந்தஜி மகராஜ், வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். மதியம் கருமன்கூடல் கே.எஸ்.வி பவனில் இருந்து அம்மனுக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி, 1 மணிக்கு உச்சகால பூஜை நடந்தது. மாலை ராஜ ராஜேஸ்வரி பூஜை, 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை நடக்கிறது.