×

தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு சிறுபான்மை மக்களும் குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்: முதல்வர் பழனிசாமி உறுதி

விருதுநகர்: விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது. அடிக்கல் நாட்டிய பின் விழாவில் பேசிய முதல்வர்; விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. விருதுநகர் வியாபார நகரமாகவும், சிவகாசி தொழில் நகரமாகவும் தற்போது விளங்கி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவ கல்வி கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது சரித்திர சாதனை. மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெரும் தொகை ரூ2 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 16ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி விரைவில் துவங்கப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். சிவகாசியை மாநகராட்சியாக்கும் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மூலம் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவ கல்வி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். மேலும் பேசிய அவர்; தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு சிறுபான்மை மக்களும் குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். என்பிஆர் கணக்கெடுப்பின் போது இஸ்லாமியர்கள் எந்த ஆதாரமும் அளிக்கத் தேவையில்லை. என்பிஆர் கணக்கெடுப்பில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 3 விதிகளை கடைபிடிக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அரணாக தமிழக அரசு இருக்கும்.

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப இஸ்லாமிய பெண்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Palaniswami ,Tamil , Tamilnadu, Minorities, Citizenship Act, CM Palanisamy
× RELATED எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால்...