×

சிவகிரியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய மருத்துவமனை கட்டிடம்

சிவகிரி: சிவகிரியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழைய மருத்துவமனையை சீர்படுத்தி பிரசவ மருத்துவமனை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகிரியில் இருந்து மலைக்கோவில் செல்லும் மெயின் பாதையில் குமாரபுரத்தில் பழைய அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ஊரின் மையப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் அரசு சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்தது. பொது மருத்துவம் பெண், ஆண்களுக்கான தனித்தனி பிரிவுகளும் குழந்தைகளுக்கு என்று தனிப்பிரிவுகளோடு இயங்கி வந்தது. பிரேத பரிசோதனைக்கூடமும் மற்றும் அனைத்து வகையாக கட்டிட வசதிகளுடன் இயங்கி வந்தது ஓடுகளினால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் கோரிக்கையினை ஏற்று சிவகிரி தாலுகா மருத்துவமனையாக 36 பெட் வசதிகளுடன் புதியதாக கட்டடங்கள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன் மெயின் ரோட்டிற்கு மேற்கு பக்கம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு அனைத்து வகையான பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. இதனால் பழைய மருத்துவமனை கண்டுகொள்ளப்படாததால் கட்டிடங்கள் அனைத்தும் சேதமுற்றும் ஓடுகள் விழுந்தும் மோசமாக காட்சியளிக்கிறது. கேட் வாசல்கள் கதவுகள் சரியாக இல்லாததால் சமூக விரோதிகள் இப்பகுதிகளுக்குள் புகுந்து மது குடித்தல், சீட்டு விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகளை போடும் இடமாக மாறிவருவதால் சுகாதார கேட்டினை உண்டாக்கி வருகிறது.
அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால்தான் தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பெறமுடியும். இப்பகுதிகளில் பெண்களுக்கென்று தனியாக பிரசவ மருத்துவமனை இல்லாததால் தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறமுடியாத நிலையில் பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.

எனவே, இந்த அரசு மருத்துவமனையை சீரமைத்து பெண்களுக்கென்று பிரசவ மருத்துவமனையாக அமைக்க வேண்டும். சுகாதார கேடு அற்ற இடமாக மாற்றி நல்ல வசதி செய்து தர வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Hospital building ,Sivagiri ,anti-socials , Sivagiri, antagonist, hospital building
× RELATED நெல்லை அருகே மூதாட்டி தற்கொலை