×

பெண்கள் கபடி: ராணி மேரி சாம்பியன்

சென்னை: சென்னையில் பிராட்வேயில் உள்ள பாரதி பெண்கள் கல்லூரியின் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை கல்லூரிகள் பங்கேற்ற பெண்கள் கபடி போட்டி நடந்தது. பாரதி கல்லூரி வளாகத்தில் நடந்த  இறுதிப்போட்டியில் ராணி மேரி கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி அணிகள் மோதின.   இதில் ராணி மேரி கல்லூரி 42-14 என்ற புள்ளிகள் கணக்கில், பாரதி கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு ஜலதி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் உமாசங்கர், பாரதி பெண்கள் கல்லூரி முதல்வர் முனைவர் கிளாடிஸ், பேராசிரியர் ஷகிலா ஜாஸ்மின் ஆகிய மூவரும் பரிசுகள் வழங்கினர்.


Tags : Queen Mary Champion , Girls Kabaddi, Queen Mary Champion
× RELATED திருப்புத்தூரில் கல்லூரிகளுக்கிடையேயான பெண்கள் கபடி போட்டி