தேசிய பூப்பந்து: ரயில்வே ஐவர் சாம்பியன்

சென்னை: தேசிய பால் பேட்மின்டன் போட்டியில் ஐவர் குழு ஆண், பெண்கள் பிரிவில் இந்தியன் ரயில்வே, கர்நாடகா அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன. 2 பிரிவு பைனலிலும் போராடி தோற்ற தமிழ்நாடு, 2வது இடத்தை பிடித்தது. சென்னையில் உள்ள  செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில்,  தேசிய அளவிலான 65வது சீனியர் பால் பேட்மின்டன் போட்டிகள் நடந்தது. இதில் 28 மாநிலங்கள், 3 மாநில பிரதேசங்கள், 6 பொதுத் துறை உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 36 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் பங்கேற்றன.இரட்டையர், ஐவர் என 2 பிரிவு களாக போட்டிகள் நடந்தன. இதன் ஆண்கள் ஐவர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே, தமிழ்நாடு அணிகள் மோதின. அதில் 24-35, 35-28, 35-21 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் ரயில்வே அணி போராடி சாம்பியன் பட்டத்தை வென்றது.பெண்கள் ஐவர் பிரிவு இறுதிப்போட்டியில், கர்நாடகா அணி 35-31, 27-35, 35-24 என்ற புள்ளி கணக்கில் போராடி, தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றிபெற்ற அனைவருக்கும் கல்லூரி தலைவர் டாக்டர் பாபு மனோகரன், முன்னாள் தடகள வீராங்கனை பத்ம ஷைனி வில்சன், முன்னாள் நீச்சல் வீரரும்;  அர்ஜுனா விருது வென்றவருமான வில்சன் செரியன் ஆகியோர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.

Related Stories:

>