×

டொயோட்டா பிராண்டில் அறிமுகமாகும் 3வது மாருதி கார்

டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் புதிய கார் தயாரிப்புகளுக்கான முதலீடுகளை குறைக்கும் நோக்கில், இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் கிளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரக கார் விரைவில் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிலையில், மூன்றாவது கார் மாடலாக மாருதி எர்டிகா கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி எர்டிகா கார் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த கார், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், டொயோட்டா நிறுவனம் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இரண்டாம் தலைமுறை மாடலாக இருக்கும் மாருதி எர்டிகா கார்தான் டொயோட்டா பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதாவது, மாருதி சுஸுகி லோகோவுக்கு பதிலாக டெயோட்டா லோகோ இடம்பெற்றிருக்கும். சில சிறிய அளவிலான மாற்றங்களும் இடம்ெபறும். அத்துடன், கார் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படும். டொயோட்டா கிளான்ஸா கார் போன்றே குறிப்பிட்ட சில வேரியண்ட்டுகளில் மட்டும் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், பெட்ரோல் இன்ஜின் தேர்வில் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எதிர்பார்க்கலாம். மாருதி எர்டிகா காரில் இருக்கும் அதே சிறப்பம்சங்களுடன் கிடைக்கும். மாருதி எர்டிகா கார் மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.



Tags : Toyota ,Maruti , Toyota Brand, Maruti Car
× RELATED பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு