×

ஹீரோவின் முதல் 160 சிசி பைக்

புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சந்தையில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகும் முதல் 160சிசி மோட்டார் சைக்கிளாக விளங்க உள்ளது இப்புதிய மோட்டார் சைக்கிள். எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் பைக்குகளுக்கு பிறகு எக்ஸ்ட்ரீம் வரிசையில் வெளியாகும் மூன்றாவது மாடல் இந்த எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் ஆகும். ஹீரோ நிறுவனத்தின் 1.ஆர் கான்செப்ட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்புதிய 160சிசி பைக் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் மாடல் பைக்குகளுக்கான லோகோ இப்புதிய பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் டேங்க், இருக்கை அடியிலும் நீட்டிக்கப்பட்டதாக உள்ளது. முரட்டுத்தனமான வடிவில் எக்ஸாஸ்ட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மிகவும் காஸ்ட்லியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

அலாய் சக்கரங்களுக்கு பக்கவாட்டில் வலிமையான தூண் போன்ற ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளன. இருக்கை பிளவுப்படாமல் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் உள்ளது. இதனால் பைக்கின் பின்பகுதியின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 160 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இப்புதிய பைக் 0-60 கி.மீ. வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் அடைந்து விடுகிறது. இதனால் இதன் பிரிவில் மிக வேகமான பைக் மாடலாக இது விளங்குகிறது. தொழில்நுட்பங்களை பொறுத்தவரையில், 37 மி.மீ. ஷோவா போர்க்ஸ் முன்புறத்திலும், மோனோஷாக் பின்புறத்திலும் சஸ்பென்ஷன் அமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 17 அங்குல அலாய் வீல் முன்புறத்திற்கு 110 மி.மீ. ரப்பர் டயரும், பின்புறத்தில் 130 மி.மீ. அகலமான ரேடியல் டயரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மொத்த எடை 138.5 கிலோ ஆகும். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக்குகளுடன் நேரடியாக போட்டியிட உள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.



Tags : Hero's , 160cc bike
× RELATED ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை...