×

வங்கதேச நூற்றாண்டு விழா சிறப்பு விருந்தினர் பட்டியலில் மோடி : இங்கிலாந்து தூதர் தகவல்

லண்டன்: வங்கதேசத்தினரால் `வங்கபந்து’ என்றழைக்கப்படும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 1971ல் வங்கதேசம் உருவானபோது அதன் முதல் அதிபராக பொறுப்பேற்று கொண்ட முஜிபுர், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

 இந்நிலையில், இங்கிலாந்துக்கான வங்கதேச தூதர் சயிதா முனா தஸ்னீம் கூறுகையில், ``இம்மாதம் 17ம் தேதி வங்கதேசத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதே தேதியில் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினரில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவராவார். வங்கதேச விடுதலையில் இந்தியா முக்கிய பங்காற்றி உள்ளது.  முஜிபுர் ரஹ்மான் அதிபராக இருந்த போது, அப்போதைய இந்திய பிரதமர் இந்திராவுடன் இணைந்து, ஆக்கப்பூர்வநடவடிக்கைகள் எடுத்தனர்’’ என்றார்.

Tags : UK ,Bangladesh Centenary Special Guest Modi , Bangladesh Centenary, special guest, Modi ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...