×

அகதிகள் ஐரோப்பா செல்ல கிரீஸ் அருகே எல்லை திறப்பு

அங்காரா: துருக்கியில் அகதிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், ஐரோப்பா  செல்ல விரும்பும் அகதிகளுக்காக கிரீஸ் நாட்டுடனான எல்லை திறக்கப்படுவதாக  இந்நாட்டு அதிபர் ரிசெப் தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.கிரீஸ் வழியாக  ஐரோப்பாவுக்குள் நுழையும் அகதிகளை தங்களால்  தடுத்து நிறுத்த முடியாது’ என்று எர்டோகன் சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து அகதிகள் நுழைவதைத் தடுக்க கிரீஸ் தன்  எல்லையை மூடியது. இதனால், அகதிகளுக்கும் கிரீஸ் போலீசுக்கும் இடையே நேற்று சண்டை மூண்டது.  இந்நிலையில்,  இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்த எர்டோகன், ``ஐரோப்பாவிற்குள்  நுழைய விரும்பும் அகதிகளுக்கு துருக்கி தடையாக இருக்காது.  ஐரோப்பா செல்ல விரும்பும் அகதிகளுக்காக கிரீஸ் நாட்டுடனான  எல்லை திறக்கப்படும்’’ என்றார்.அவரது அறிவிப் பின்படி எல்லை திறந்து விடப்பட்டுள்ளது.



Tags : Refugees ,border ,Greece ,Europe ,Europe Border Opening , Refugees, Europe, Border opening ,Greece
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...