×

பாகிஸ்தானில் பேருந்து-ரயில் மோதிய விபத்தில் 20 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுக்கூரில் இருந்து பஞ்சாப் நோக்கி நேற்று இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரோஹ்ரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை  கடக்க முயன்றது. அப்போது அந்த தண்டவாளத்தில், ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த `பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ ரயில் பேருந்து மீது மோதியது.

இதில் ரயில் இன்ஜினில் சிக்கிய பேருந்து 200 அடி  தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள ரோஹ்ரி, சுக்கூர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். ரயில் வருவதற்கு முன் ரயில்வே கேட்டை கடந்து விட வேண்டும் என்ற பேருந்து ஓட்டுனரின் தவறான முடிவு விபத்துக்கு காரணம் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : bus accident ,Pakistan , Bus-train ,Pakistan, 20 killed ,collision accident
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்