×

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் மேகாலயாவில் இரு தரப்பினர் மோதல் ஊரடங்கு அமல், இன்டர்நெட் நிறுத்தம்

ஷில்லாங்: மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடந்த சிஏஏ மற்றும் ஐஎல்பி கூட்டத்தின்போது இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார். இதனால் ஷில்லாங்கின் சில பகுதிகளில் நேற்று மதியம் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.
மேகாலயாவில் வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் இருந்து வந்தவர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். மேலும் வேலை வாய்ப்புக்காக, இங்கு வெளி மாநிலத்தவர்களும் அதிகளவில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஐஎல்பி எனப்படும் சிறப்பு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால், குடியேறிகள் பலர், குடியுரிமை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மேகாலயா பழங்குடியின மக்களும், இங்குள்ள காசி மாணவர்கள்  சங்கத்தினரும்(கேஎஸ்யு) மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிஏஏ மற்றும் ஐஎல்பி தொடர்பான கூட்டம் இந்தியா-வங்கதேச எல்லை அருகேயுள்ள கிழக்கு காசி  ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள இசாமதி  பகுதியில் நேற்று நடந்தது.  அப்போது, மாணவர்கள் அணியினருக்கும், பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இச்சம்பவத்தையடுத்து நேற்று மதியம் அங்கு ஊடரங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. 6 மாவட்டங்களில் போன் இன்டர்நெட்  சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.மேகாலயாவில் ஏற்கனவே நடந்த மோதல் காரணமாக நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, நேற்று காலைதான் விலக்கி  கொள்ளப்பட்டது. அதற்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு நேற்று மதியம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



Tags : Meghalaya ,Conflict , anti-CAA , Two-party ,Meghalaya, Curfew, Internet parking
× RELATED மேகாலயா முதல்வர் பிரசாரத்தில் ரூ.1 கோடி பறிமுதல்